மகாத்மா காந்தியின் பண்புகளையும் பாஜக ஏற்றுக்கொள்ள வேண்டும்…

மகாத்மா காந்தியை ஏற்கும் பிரதமர் மோடி, அகிம்சை, நேர்மை, மதச்சார்பின்மை ஆகிய பண்புகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,   60 ஆண்டுகளுக்கு பின் மகாத்மா காந்தி பாஜக அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.காந்தியை சுட்டவர்  பாஜகவின் சிந்தாந்தத்தை உடைய ஒருவரே என குறிப்பிட்ட கெலாட், இதனை நாடே அறியும் என்றும், அரசியல் உள்நோக்கத்திற்காக காந்தி தற்போது அங்கீகரிக்கப்பட்டதாகவும் கூறினார்.

எனவே காந்தியின் பண்புகளான அகிம்சை, நேர்மை, மதச்சார்பின்மையை முழு மனதோடு அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் அங்கீகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன் மூலம் இந்துத்துவம், லவ் ஜிகாத் உள்ளிட்ட பிரச்னைகள் முடிவுக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

Translate »
error: Content is protected !!