மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆயிரத்து 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. பொதுமுடக்கம் நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட போது மிகுந்த எழுச்சியுடன் காணப்பட்ட மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக நிலையற்று காணப்பட்டது. கடந்த வாரம் மும்பை பங்கு சந்தை சரிவை சந்தித்து வந்தது.
இந்நிலையில் மும்பை பங்கு சந்தை வார வர்த்தக தொடக்க நாளான இன்று வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆயிரத்து 274 புள்ளிகள் வரை சரிந்து, 55 ஆயிரத்து 737 ஆக நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது. இதேபோல் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 385 புள்ளிகள் வரை சரிந்து 16 ஆயிரத்து 599 என நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது. ஆட்டோமொபைல், வங்கி, உலோகம், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு துறைகளை சேர்ந்த பங்குகள் 2 முதல் 4 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்தன