ஐஆர்சிடிசி இணையதளத்தில் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐஆர்சிடிசி எனப்படும் இந்தியன் ரைல்வே கேட்டரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் இணையதளம் மற்றும் செயலி மூலம் ரயில் டிக்கெட், விமான டிக்கெட், சுற்றுலா பேக்கேஜ் ஆகிய டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வசதியாக பேருந்துகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே ஒரு லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு மூலம் பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி இணையதளம் அறிமுகம் செய்துள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலம் 22 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.