CAA சட்டத்தை நடைமுறைபடுத்த துடிக்கும் மோடி அரசின் மக்கள் விரோத போக்கு INTJ பொதுச்செயலாளர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முஹம்மது சித்திக் வெளியிடும் கண்டன அறிக்கையில்.
குடியுரிமைத் திருத்தச் சட்டம் (CAA), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR) ஆகியவற்றை எதிர்த்துக் கட்சிசார்பற்ற வெகுமக்களும் இலட்சக்கணக்கில் பங்கேற்ற அறபோராட்டங்கள் நாடு தழுவிய அளவில் தீவிரமாக நடைபெற்றன..
கொரோனா எனும் பெருந்தொற்றில் நாடே கஷ்டப்படும் இச்சூழலில், பாஜக ஃபாசிச அரசு தற்போது மீண்டும் CAA அமல்படுத்தப்படும் என்பது தற்போது உள்ள கொரோனாவை விட கொடுமையான செயல். மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளால் நாட்டில் மக்கள் மனம் உடைந்து உள்ள நிலையில் தற்போது மீண்டும் போராட்டத்தின் பக்கம் மக்களை திருப்பவது கண்டனத்திற்குறிய செயல்..
மேலும் தற்போது சூழ்ந்திருக்கும் பேராபத்தை உணர்ந்து, மத்திய மோடி அரசு குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மீண்டும் கொண்டவர துடிக்கும் செயலை உடனடியாக கைவிட வேண்டும் இல்லையென்றால் முன்பு நடந்த CAA போராட்டங்களை விட மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்..