அறிக்கை என்னுடையதல்ல; ஆனால் விஷயம் உண்மை! ஜகா வாங்குகிறார் ரஜினி!

சமூக வலைதளங்களில் தனது பெயரில் வெளியான அறிக்கை தன்னுடையது அல்ல; ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள விஷயங்கள் உண்மை என்று நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார். கடந்த இரு தினங்களாக நடிகர் ரஜினியின் பெயரில் சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று வெளியாகி பெரும்…

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை! தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளம்

சென்னை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை தொடர்வதால், அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

2021ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்கள் அறிவிப்பு

எதிர்வரும் 2021ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை தினங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 23 நாள்கள் அரசு விடுமுறை நாட்களாகும். வழக்கமாக ஆண்டின் இறுதியில், அடுத்து வரும் ஆண்டிற்கான அரசு விடுமுறை நாட்களை, தமிழக அரசு வெளியிடுவது வழக்கம். அவ்வகையில் எதிர்வரும்…

பாஜக தேசிய மகளிரணி தலைவராக வானதி சீனிவாசன் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக, தமிழகத்தை சேர்ந்த வானதி சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பொறுப்பேற்ற பிறகு, தேசிய நிர்வாகிகள் மாற்றியமைக்கப்பட்டனர். இதில், தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் யாருக்கும் எவ்வித பொறுப்பும் வழங்கப்படவில்லை.…

சென்னையில் 6 அதிமுக புதிதாக மாவட்டங்கள், பொறுப்பாளர்கள் நியமனம்

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள ஏதுவாக, அதிமுகவில் சென்னையில் 6 புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கு பொறுப்பாளர்களை நியமித்து கட்சி தலைமையகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் – மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கு தமிழக அரசியல்…

எனது உயிருக்கு ஆபத்து! இயக்குனர் சீனு ராமசாமி பகீர் தகவல்

நடிகர் விஜய்சேதுபதியை ‘800’ திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று கூறியிருந்த இயக்குனர் சீனு ராமசாமி, தனது கொலை மிரட்டல் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பது, திரையுலக வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. தென்மேற்கு பருவக்காற்று என்ற சினிமாவின் வாயிலாக, நடிகர் விஜய்சேதுபதியை நாயகனாக அறிமுகப்படுத்தியவர்…

தியேட்டர்கள், பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் பழனிச்சாமி வெளியிட்ட தகவல்

தமிழகத்தில் பள்ளி-கல்லூரிகள், சினிமா தியேட்டர்கள் திறப்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு உரிய முடிவு அறிவிக்கப்படும் என்று, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கொரோனா தொற்றை தொடர்ந்து தமிழகத்தில் மார்ச் மாதம் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது.…

தகாத முறையில் நடந்தவருக்கு எய்ம்ஸ் உறுப்பினர் பதவியா? தலைவர்கள் கண்டனம்

சென்னையில் பெண்ணிடம் இழிவாக நடந்து கொண்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி சுப்பையா சண்முகம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்; இதற்கு தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு, அசாம், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்…

குஷ்புவுக்கு இவ்வளவு முக்கியத்துவமா? தமிழக பாஜகவில் முணுமுணுப்பு

பாஜகவில் அண்மையில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு கட்சியில் அதிக முக்கியத்துவம் தர வேண்டுமா என, தமிழக பாஜக மூத்த தலைவர்கள் சிலர் அதிருப்தியடைந்திருப்பதாக, தகவல் கசிந்துள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ள நிலையில், அதற்கேற்ப அரசியல் களம் பரபரப்பாகி வருகிறது.…

கொரோனா பரவலுக்கு மத்தியில் பீகாரில் நாளை சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவு

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் பீகார் சட்டசபைக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நாளை (அக். 28) நடைபெறுகிறது. பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. நிதிஷ்குமாரின் பதவி காலம் நிறைவடையும் நிலையில் பீகாரில் 3 கட்டங்களாக…

Translate »
error: Content is protected !!