இந்தியாவில் கொரோனா நிலவரம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை கடந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் இந்த பாதிப்பு 19 ஆயிரத்து 893 ஆக பதிவான நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 20 ஆயிரத்து 551க்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக…

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு – குளிக்க தடை

கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு நீடிப்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்ட தடை 9-வது நாளாக தொடர்கிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான கொடைக்கானல், வட்டகணல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி பகுதிகளில் கடந்த…

கேரளாவில் CUET இளநிலை தேர்வு ஒத்திவைப்பு

கேரளாவில் அதிகனமழை கொட்டி தீர்த்து வருவதால் CUET இளநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு CUET தேர்வு நடத்தப்படுகிறது. கேரளாவில் CUET இளநிலை தேர்வு நேற்று தொடங்கி நாளை வரை நடைபெற இருந்தது. இந்தநிலையில்…

மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே மீதான தடை நீட்டிப்பு

இலங்கையில் இருந்து மகிந்த ராஜபக்சே மற்றும் பசில் ராஜபக்சே ஆகிய இருவரும் வெளியேற விதிக்கப்பட்டிருந்த தடையை நீட்டித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான ராஜபக்சே சகோதரர்கள் மீது விசாரணை நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த…

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 184 ரூபாய் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளது. அதன்படி, கிராமுக்கு 23 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 4 ஆயிரத்து 825…

சீல் வைத்ததாக செய்திகள் – நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மறுப்பு

டெல்லியில் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சீல் வைத்ததாக செய்திகள் வெளியான நிலையில், அந்நிறுவனம் அதனை மறுத்துள்ளது. பண மோசடி நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் மற்றும் சோனியா காந்தி இயக்குநர்களாக உள்ள நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டது.…

சுங்க கட்டணங்களை வசூலிக்க புதிய தொழில்நுட்பம்

சுங்க கட்டணங்களை வசூலிக்க புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் என்றும், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகள் விரைவில் அகற்றப்படும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உறுதியளித்தார். நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, நாடு முழுவதும்…

வானிலை தகவல் – தமிழகம்

தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, 03.08.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை…

ஆடிப்பெருக்கை கொண்டாட மேட்டூர் வரும் பொதுமக்கள்

ஆடிப்பெருக்கை கொண்டாட மேட்டூர் வரும் பொதுமக்கள் 16 கண் மதகுகள் வழியாக பொங்கி வரும் காவிரியை கண்டு ரசித்த வண்ணம் உள்ளனர். தமிழகம் மற்றும் கர்நாடக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்து…

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை

போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14வது ஊதிய ஒப்பந்தத்தின் ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று குரோம்பேட்டையில் நடைபெறுகிறது. ஊதிய ஒப்பந்தத்தை ஆக.3 ம் தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஐந்து கட்டங்களாக நடைபெற்ற…

Translate »
error: Content is protected !!