கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் இரவு ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரை

கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால், அங்கு இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.

கேரளாவில் வெள்ளிக்கிழமை முப்பது ஆயிரம் பேருக்கும், மகாராஷ்டிராவில் வியாழக்கிழமை ஐயாயிரம் பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

இந்நிலையில், மத்திய உள்துறை செயலாளர் இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனருடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வீடியோ கான்பரன்சிங் நடத்தினார். அதில் கொரோனா தொற்று அதிகம் பரவுவதால் இரவு ஊரடங்கை அமல்படுத்தலாமா என்பதைப் பரிசீலிக்கும்படியும் அவர் கேட்டுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!