சென்னை: மாணவர்களுக்கு இனிப்புகளை கொடுத்து வரவேற்றார் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் கடந்த 2020 ஆண்டு மார்ச் முதல் பள்ளிகள் பள்ளிகள், மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. கல்லூரிகளிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.

தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில், 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில், சென்னை மடுவின்கரை பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். பின்னர் கொரோனா பெருந்தொற்று குறைந்ததையொட்டி மீண்டும் பள்ளிக்கு பயில வருகை தந்த மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி அன்புடன் வரவேற்றார்.

Translate »
error: Content is protected !!