சென்னையில் தொடர்மழை.. 36000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் நிறுத்தம்

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முதல் விடியவிடிய காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் உள்ள சுரங்கபாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சென்னையில் பல்வேறு இடங்களில் 36000க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. பெரம்பூர், வியாசர்பாடி, மேற்கு மாம்பலம், தி.நகர், கே.கே.நகர் மற்றும் வேளச்சேரியின் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. வீடுகளைச் சுற்றியுள்ள மழைநீர் வடிந்த பின் மீண்டும் மின்விநியோகம் செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், கடலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!