கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கர்நாடகாவில் கோலார் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் 32 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதை பற்றி கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் கேரளாவிலிருந்து திரும்பியவர்கள். மேலும் இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நான் அந்த கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்ய முடிவு செய்துளேன் என்றார். கேரளாவைச் சேர்ந்தவர்கள் கொரோனா நெகடிவ் சான்றிதழை கொண்டு வந்தாலும், அரசு அவர்களை ஒரு வாரத்திற்கு தனிமைப்படுத்த வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.