இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 46,164 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 46,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 25 லட்சத்து 58 ஆயிரம் 530 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 34,159 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 17 லட்சத்து 88 ஆயிரத்து 440 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸுக்கு 3,33,725 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 607 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 36 ஆயிரம் 365 ஆக உயர்ந்துள்ளது. 

Translate »
error: Content is protected !!