நாடு முழுவதும் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.பொது மக்கள் ஆர்வத்துடன் முகாம்களில் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நாட்டில் ஒமைக்ரான் பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இன்றுவரை, நாட்டில் 200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை 138.35 கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 64,56,911 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. அதன்படி, காலை 7 மணி நிலவரப்படி, 1,38,34,78,181 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.