குற்றால அருவில்களில் மிகவும் குறைந்த அளவிலேயே தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். கொரோனா தாக்கத்தால் தடை விதிக்கப்பட்டு இருந்த குற்றாலம் அருவிகளில் கடந்த டிசம்பர் 20ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மகிழ்ச்சி அடைந்த மக்கள், வார விடுமுறை நாட்களில் குற்றால அருவிகளை நோக்கி படையெடுக்க தொடங்கினர். இந்நிலையில், குற்றால அருவிகளில் தற்போது நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சிவராத்திரியையொட்டி, குற்றால அருவிகளில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றத்துடனே திரும்பி சென்றனர்.