தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான பாலா, சுமூகமான முறையில் மனைவியை பிரிந்துள்ளார். சேது, நந்தா, பிதாமகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பாலா, கடந்த 2004ம் ஆண்டு முத்துமலரை திருமணம் செய்து கொண்டார். 18 ஆண்டுகள் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 4 ஆண்டுகளாக மனதளவில் பிரிந்திருந்தனர். இந்நிலையில், இயக்குனர் பாலாவும் அவர் மனைவி முத்துமலரும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர்.