கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கு தடை விதிப்பதா? அல்லது அனுமதிப்பதா? என்பது குறித்து ஆலோசனை

கிரிப்டோகரன்சி மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கு என்ன வேண்டும் என்பதை மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ வங்கியும் இணைந்து, ஆராய்ந்து செயல்படுத்தி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மெய்நிகர் பணமான கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கு தடை விதிப்பதா? அல்லது அனுமதிப்பதா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும், அவரவர் துறைகளுக்கு மதிப்பளித்து, கிரிப்டோகரன்சி மட்டுமின்றி நாட்டின் வளர்ச்சிக்கான அனைத்து வழிவகைகளையும் ஆராய்ந்து வருவதாக நிர்மலா சீதாராமன் கூறினார். இதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், கிரிப்டோ கரன்சி குறித்த அனைத்து விவரங்களும் மத்திய அரசுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார்.

Translate »
error: Content is protected !!