உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியாக, ஆசிய பங்குச்சந்தை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே, ஆயிரத்து 713 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. அதன்படி ஆசிய பங்குச்சந்தை ஆயிரத்து 713 புள்ளிகள் வரை சரிந்து 55 ஆயிரத்து 518 புள்ளிகளில் நிலைக்கொண்டு வர்த்தகமாகியுள்ளது.
இதேபோல் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 498 புள்ளிகள் குறைந்து 16 ஆயிரத்து 564 என நிலைக் கொண்டு வர்த்தமாகியுள்ளது. ஆட்டோமொபைல், வங்கி, எஃப்.எம்.சி.ஜி., எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், ஐ.டி., மின்சாரம் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட அனைத்து துறையைச் சார்ந்த பங்குகளும், 2 முதல் 4 சதவீதம் அளவுக்கு சரிவை சந்தித்துள்ளன.