ரஷ்யா-உக்ரைன் போரால், இந்தியாவின் விவசாய பொருட்களுக்கான ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வரும் சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீத்தாராமன், இரு நாடுகளுக்கு இடையிலான போரால் இந்தியாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பெரிதும் பாதிக்கப்படும் என தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்றும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களை அந்தந்த அமைச்கங்களுடனான கலந்துரையாடலுக்கு பின்னரே விரிவாக தெரிவிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.