முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் 200 ரூபாயில் இருந்து 500 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முகக் கவசம் அணியும் போது மூக்கு மற்றும் வாய் பகுதியை மறைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “மக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக கடைபிடிக்க வேண்டும். முகக்கவசத்தை முழுமையாக அணிந்திருக்க வேண்டும். முகக்கவசத்தை முழுமையாக அணியாவிட்டாலும் அபராதம் விதிக்கப்படும்.
ஒமைக்ரான் வேகமாக பரவி வருவதால் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கவும். அடுத்த சில நாட்களுக்கு மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிந்தால் நோய் பரவலின் தீவிரம் தன்மை குறையும்,” என்றார்.