சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு அமைந்துள்ள பகுதிக்கு அருகே பெரிய மரம் ஒன்று கனமழை காரணமாக திடீரென சரிந்து விழுந்தது. மரம் வேரோடு சரிந்து விழுந்ததில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண் காவலர் பலியானார். போக்குவரத்து காவலர் ஒருவர் காயமடைந்தார். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.