10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வு ஜனவரி 19ம் தேதி தொடங்கும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், நடப்பு கல்வி ஆண்டில் மாணவர்களின் அறிவுத்திறனை சோதிக்கும் விதமாக 10, 12-ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜனவரி, மார்ச் மாதங்களில் முதல் மற்றும் 2-ம் திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 28-ம் தேதி வரையிலும், இரண்டாம் திருப்புதல் தேர்வு மார்ச் 21-ல் தொடங்கி 29-ம் தேதி வரையிலும் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. விரிவான தேர்வுக் கால அட்டவணையை பள்ளி ஆசிரியர்கள் மூலம் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!