வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பெய்து வந்த கனமழையால், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூர் நீர்த்தேக்கத்தில் நீர் வரத்து அதிகரிப்பதால் அணையின் பாதுகாப்பை கருதி விநாடிக்கு 11 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. திறக்கப்படும் உபரி நீரானது ஆரணியாற்றின் வழியாக ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, கவரப்பேட்டை, ஏலியம்பேடு, பொன்னேரி, பெரும்பேடு, ஆண்டார்மடம் வழியாக பழவேற்காடு அருகே கடலில் கலக்கும். இதனால் ஆரணி ஆற்றின் கரையின் இரு புறங்களிலும் உள்ள 70-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார் திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்.