பொதுக்குழு இல்லை போட்டி இல்லை – விஜய் ரசிகர்கள் போஸ்டர்

 

பொதுக்குழு இல்லை போட்டி இல்லை என குறிப்பிட்டு மதுரையில் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஓட்டியுள்ளனர். நடிகர் விஜய் இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். அதனை அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பலவிதமான போஸ்டர்களையும் அடித்து விஜய் பிறந்தநாளையொட்டி தங்களின் வாழ்த்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மதுரை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் அதிமுக அரசியலை முன்வைத்து போஸ்டரை அடித்துள்ளனர்.

அதேபோல் பொதுக்குழு இல்லை போட்டியில்லை என்றும் எங்கள் நிரந்தர தலைமையே வணங்கி வாழ்த்துகிறோம் என விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!