அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ செலவினங்கள் 26 ஆண்டுகளுக்குப் பின் திருத்தியமைக்கப்பட்டுள்ளது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டுத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இடம்பெறாத மருத்துவமனைகள், சிகிச்சைகளுக்கு அரசு ஊழியர்கள் / ஓய்வூதியதாரர்கள் செலவழிக்கும் தொகையை தமிழ்நாடு அரசு பின்னர் திருப்பி செலுத்தி வருகிறது. அவ்வாறு திருப்பி வழங்கப்படும் தொகையானது 26 ஆண்டுகளுக்குப் பின் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இடம்பெறாத மருத்துவமனைகள், சிகிச்சைகள் என்று அனைத்துக்கும் நடப்பு ஆண்டுக்கு ஏற்ற வகையில் அரசு திருப்பி வழங்கும் தொகை திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.