மயங்கி கிடந்த மூதாட்டிக்கு முதலுதவி அளித்து சிகிச்சைக்காக ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு பொங்கல் வைத்து கொண்டாடினார். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற மூதாட்டி திடீரென மயங்கி விழுந்தார்.
இதைப் பார்த்த ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உடனடியாக மருத்துவராகி மூதாட்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.