செப்டம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டி வசூல் 1.17 லட்சம் கோடி

ஜிஎஸ்டி வரி வருவாய் குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

செப்டம்பர் மாதத்திற்கான சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ரூ .1.17 லட்சம் கோடியாக உள்ளது. ஜிஎஸ்டி வருவாய் கடந்த 5 மாதங்களில் 1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

ஜிஎஸ்டி வசூல் அக்டோபர் 2020 முதல் மே 2021 வரை தொடர்ந்து ரூ .1 லட்சம் கோடிக்கு மேல் இருந்தது. இருப்பினும், இரண்டாவது அலையால் ஏற்பட்ட பொருளாதார இடையூறை பிரதிபலிக்கும் வகையில் ஜூன் மாதத்தில் இது ரூ .92,849 கோடியாக சரிந்தது.

 

Translate »
error: Content is protected !!