பாலியல் வன்கொடுமை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 25, சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தடுப்பு நாள் அனுசரிக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினத்தில், பெண்கள் மீது நிகழும் வன்முறைகளுக்கு எதிரான விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.

இந்நிலையில், இந்த தினத்தை குறிப்பிட்டு, தற்போது தமிழகத்தில் அதிகமாக பதிவாகும் பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் – அவற்றின் தொடர்ச்சியாக நிகழும் தற்கொலைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். அதில் அவர், “உடல் ரீதியாக, பெண்ணின் விருப்பத்துக்கு எதிராக செய்யப்படும் பாலியல் சீண்டல்களுக்கு எதிராக, பல சட்டங்கள் உள்ளன. அந்தச் சட்டங்களின் முன்னால் குற்றவாளிகள் நிறுத்தப்பட்டு, அவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என உறுதியளித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!