சென்னையில் இருந்து தென்கிழக்கே 170 கி.மீ தொலைவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, தெற்கு வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகரும் வேகம், தற்போது, 27 கி.மீ.,ல் இருந்து, 21 கி.மீ., ஆக குறைந்துள்ளது. புயல் கரையை கடக்கும் போது 40 – 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும். பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.