புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு அந்தமான் அருகே வரும் 29ம் தேதி உருவாகும் என்றும், காற்றின் வேகம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் எனவும் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு அமையம் தெரிவித்துள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.