காப்புரிமை தொடர்பாக இசையமைப்பாளர் இளையராஜா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு இந்தியன் ரெக்கார்டு கம்பெனி உள்ளிட்ட இரு மியூசிக் நிறுவனங்கள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காப்புரிமை தொடர்பாக இளையராஜா இசையமைத்த 30 படங்களின் இசையை அவர் பயன்படுத்த முன்னதாக தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து இளையராஜா தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
அதில், பட தயாரிப்பாளர்களுக்கு படத்தின் காப்புரிமை மட்டுமே உள்ளதாகவும், இசை பணிகளுக்கு அவர்கள் முதல் உரிமையாளர்கள் அல்ல எனவும் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது.