இந்தியா – நியூசி. நாளை மோதல்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இப்போட்டி, நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நடைபெறவுள்ளது. முதல் போட்டியில் பாகிஸ்தானை வென்ற உற்சாகத்துடன் உள்ள இந்திய அணி, இப்போட்டியிலும் வெற்றியை தொடரும் முனைப்புடன் உள்ளது. அதேநேரம் சொந்த நாட்டில் போட்டி நடைபெறுவதால் உள்ளூர் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி நியூசிலாந்து அணியும் இந்தியாவுக்கு கடும் சவாலை அளிக்க தயாராகி வருகிறது. இதனால், இவ்விரு அணிகள் மோதும் நாளைய ஆட்டம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Translate »
error: Content is protected !!