லாரியஸ் விருதுக்கு இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரை

விளையாட்டு உலகின் தலைசிறந்த விருதான லாரியஸ் விருதுக்கு ஒலிம்பிக்கில் தடகள விளையாட்டில் தங்கம் வென்று வரலாறு சாதனை படைத்த இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் விளையாட்டு அரங்கில் சிறந்து விளங்கும் வீரர் மற்றும் வீராங்கனைளுக்கு லாரியஸ் விருதுகள் ஏழு வகைகளில் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகின்றது. உலக அளவில் விளையாட்டு துறையை சார்ந்த தலைசிறந்த 1300 பத்திரிக்கையாளர்கள் கொண்ட குழு மூலமாக பரிந்துரை செய்யப்பட்டு, அதன்பின் ஒவ்வொரு வகை பிரிவிலும் சிறந்த வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் இந்த ஆண்டு லாரியஸ் விருதுகளில் ஒன்றான WORLD BREAK THROUGH OF THE YEAR விருதுக்கு 23 வயதான இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!