சென்னை புறநகர் பகுதியான ஆவடி சுற்றுப்பகுதிகள்1000 க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இப்பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஆட்டோக்களின் ஆவணங்கள் சரியான முறையில் இருக்கிறதா என போக்குவரத்து ஆய்வாளர் கோதண்டன் துணை ஆய்வாளர் ராஜன் தலைமையில் ஆவடி பேருந்து நிலையம் பட்டாபிராம் எம்ஜிஆர் சிலை ஆவடி செக்போஸ்ட் பகுதிகளில் ஒவ்வொரு ஆட்டோக்களிலும் இன்சுரன்ஸ் ஆர் சி புத்தகம் ரோடு டாக்ஸ் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் சரியான முறையில் காக்கி சீருடை அணிந்து இருக்கிறார்களா என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
அப்பொழுது ஆய்வாளர் கூறுகையில், மற்ற மாவட்டங்களில் நடக்கும் குற்ற செயல் போல் ஆவடி சுற்றுப்பகுதியில் நடக்காமல் தடுப்பதற்கும் ஆள் கடத்தல் போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் என்னிடம் வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதிப்பதற்கு வாகனங்களின் ஆவணங்களை சரி பார்த்தால் இதுபோல் குற்றச் செயல் நடைபெறாது எனவும் தெரிவித்தார்.