ஈரானில் ஆளுநர் தாக்கப்பட்ட கொடூரம்..

ஈரானில்  புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஆளுநரை நபர் ஒருவர் பின்னந்தலையில் தாக்கிய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

ஈரானில் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தின் புதிய ஆளுநராக அபிதின் கோரம் நியமிக்கப்பட்டுள்ளார். இதன் பதவி ஏற்பு விழா அண்மையில் நடைபெற்ற போது,  ஆளுநராக பொறுப்பேற்றுக்கொண்ட அபிதின் கோரம் மேடையில் உரையாற்றினார். அப்போது ஆவேசமாக மேடை ஏறி சென்ற ஒருவர், திடீரென ஆளுநரை தாக்கி சண்டையிடவே  பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள்  நபரை குண்டு கட்டாக  அப்புறப்படுத்தினர்.

தாக்குதலுக்கான காரணம்   தெரியவில்லை என்றபோதும், அந்த நபரின் மனைவிக்கு ஆண் செவிலியர் கொரோனா ஊசி செலுத்தியதால் அவர் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது ஆளுநரும் அந்த நபரும் ராணுவத்தில் ஒரே பிரிவில் பணியாற்றியவர்கள் என்றும், முன்விரோதத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது…

 

 

Translate »
error: Content is protected !!