மார்ச் மாதம் வெளியாக போகிறதா டான் திரைப்படம்?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக ‘டான்’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் மார்ச் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படக்குழுவினரால் வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Translate »
error: Content is protected !!