தறிகெட்டும் ஓடும் திமுகவிற்கு கடிவாளம் போட 100% வெற்றி தேவை

தறிகெட்டும் ஓடும் திமுகவிற்கு கடிவாளம் போட உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் அதிமுக வெற்றி பெற வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுக  கூட்டத்தில் பங்கேற்று பேசிய ஓ.பன்னீர்செல்வம், 100 சதவீதம் வெற்றியை தந்தால் மட்டுமே திமுகவுக்கு கடிவாளம் போட முடியும் என்றார். பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை எதனையும் நிறைவேற்றவில்லை என்று குறை  கூறினார்.

Translate »
error: Content is protected !!