டிரைவர் இல்லாமல் தானாக இயங்கும் அதிவேக புல்லட் ரெயில் சோதனை வெற்றி

ஜப்பானில் தானாக இயங்கும் டிரைவர் இல்லாத அதிவேக புல்லட் ரயிலான ‘ஷிங்கன்சென்’ சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. 12 ரயில் பெட்டிகளுடன் மணிக்கு 62 கி.மீ. வேகத்தில் இந்த ரயில் இயக்கப்பட்டது. ரயில் தானாக இயங்கினாலும், ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் தவறிழைக்காமல் பார்த்துக் கொண்டனர்.

புல்லட் ரயிலின் சோதனை வெற்றிகரமாக நிகோட்டா நிலையத்திலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஓடி, இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தை அடைந்த பிறகு நிகாட்டா ஷிங்கன்சென் ரயில் டிப்போவில் நிறுத்தப்பட்டதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!