தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி 48 மணி நேரத்தில் வட தமிழக கடலோர மாவட்டங்களில் நோக்கி நகரக் கூடும் என்பதால் குறிப்பாக 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் தென்கிழக்கு வங்க கடலில் பலத்த காற்று 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும், அதேபோல் 10, 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்க கடலில் காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும், மேலும் தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய அதற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் காற்று மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மீனவர்கள் நவம்பர் 9 முதல் 12ஆம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப் படுகிறார்கள்.
மேலும் 9ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை தமிழகம் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.