துக்க நிகழ்ச்சியிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 2 பெண்கள் மினிலாரி விபத்தில் பரிதாபம்

கள்ளக்குறிச்சி மாவட்டம்,  உளுந்தூர்பேட்டை அருகே உள்ள காட்டுநெமிலி மற்றும் நொனையவாடி ஆகிய கிராமத்தைச் சேர்ந்தவர்கள்,  கள்ளக்குறிச்சி அருகே வரஞ்சரம் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட கொங்கராபாளையம்  கிராமத்திற்கு சென்று துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று மீண்டும் வீட்டிற்கு மினிலாரியில் வரும் போது நின்னையூர் காப்புக் காடு பகுதியில் ஓட்டுநர் அழகேசன் கட்டுப்பாட்டை இழந்ததால் கார் சாலையோரம் உள்ள பள்ளத்த்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் துக்க நிகழ்ச்சியிக்கு சென்ற  அம்மாசி மனைவி பத்மாவதி வயது 55, நொனையவாடி கிராமத்தைச் சேர்ந்த அழகேசன் மனைவி தனலட்சுமி வயது 35  சென்ற மினி லாரி கவிழ்ந்து விபத்தில்   இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.  இதில் படுகாயம் ஏற்பட்ட அய்யாதுரை மகன் அழகேசன் வயது 38,  அரசன் மகன் ராமர் வயது 40, முருகன் மனைவி வனசுந்தரி வயது 38,  விசுவலிங்கம் மனைவி ஜெயந்தி வயது  31, ராமர் மனைவி லதா வயது 30, அண்ணாதுரை மனைவி விஜயா 47   என  படுகாயம் ஏற்பட்ட 7 நபர்களும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரிக்கு அனுப்பியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!