மீண்டும் இயக்குநராகிறார் கங்கனா ரனாவத் ?

 

பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் கங்கனா ரணாவத். தமிழில் தாம் தூம், தலைவி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் கங்கனா பாஜகவின் தீவிர ஆதரவாளர்.

தற்போது அவர் நடித்த தாகத்  20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கங்கனா ரணாவத் ஆக்‌ஷன் ரோலில் நடித்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. ஆனால் ‘தாகத்’ திரைப்படம், எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. குறிப்பாக படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடுகையில் அதன் ஒட்டுமொத்த வசூல், தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

அதாவது 90 கோடி மதிப்பில் தயாரான தாகத் திரைப்படம் வெறும் 3 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாக பாலிவுட் உலகில் பேசப்படுகிறது. கங்கனாவின் சினிமா வரலாற்றில் இந்தப் படம்தான் மிக மோசமாக தோல்வியடைந்திருப்பதாக தெரிகிறது. இதனால் அவர் கடும் அப்செட்டில் இருக்கிறார்.

இந்நிலையில் ‘தாகத்’ திரைப்படத்தின் தோல்வியை அடுத்து கங்கனா ரண் ஆவத் மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இந்தத் திரைப்படம் இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் அமல்படுத்தப்பட்ட நெருக்கடி (எமர்ஜென்சி) காலக்கட்டத்தை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு “எமர்ஜென்சி” என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும், கங்கனா ரணாவத்தே படத்தில் நடிக்க இருப்பதாகவும்தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் குறித்து அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

Translate »
error: Content is protected !!