கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 20 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன்விளைவால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரில் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று 11 ஆயிரத்து 600 கன அடியாக இருந்த நீர் திறப்பின் அளவு, இன்று 20 ஆயிரத்து 900 கன அடியாக அதிகரித்துள்ளது.
அதன்படி கே.ஆர்.எஸ். அணையின் அணையில் இருந்து 10 ஆயிரத்து 900 ஆயிரம் கன அடி நீரும், கபிணியில் இருந்து 10,000 கன அடியும் என மொத்தமாக வினாடிக்கு 20 ஆயிரத்து 900 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது