பிரதமர் மீது கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

உக்ரைனில் மாணவர்கள் சிக்கி தவிப்பதை கூட அரசியல் ஆதாயத்திற்காக பிரதமர் மோடி பயன்படுத்துவதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் சிக்கிக் கொண்டு இந்தியர்கள் சொல்ல முடியாத அளவுக்கு துன்பப்பட்டு வருவதாகவும், இந்திய அரசின் தெளிவான அணுகுமுறை இல்லாத காரணத்தால் தான் பதற்றமான சூழல் நிலவி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், பிரதமர் மோடி மாணவர்களை மீட்க முடிந்ததற்கு இந்தியாவின் ஆற்றலே காரணம் என்று கூறி பெருமிதப்பட்டு தேர்தல் பரப்புரையில் இறங்கியிருப்பதாகவும், இதை கூட அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Translate »
error: Content is protected !!