கோவை அருகே தனியார் குடோனில் பதுங்கியுள்ள சிறுத்தை சர்வசாதாரணமாக நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கோவையில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பி.கே.புதூர் பகுதியிலுள்ள தனியார் குடோனில் பதுங்கியுள்ளது. அதனை பிடிக்க 40க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராடி வருகின்றனர். சிறுத்தை உள்ள குடோன் முழுமையாக அடைக்கப்பட்டு, சிசிடிவி கேமராக்கள் மூலம் சிறுத்தை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை குடோனுக்குள் சிறுத்தை சர்வ சாதாரணமாக உலா வரும் காட்சியை வனத்துறையினர் வெளியிட்டுள்ளனர். இதனிடையே, தண்ணீர் அருந்த வெளியே வரும் போது அங்கு வைக்கப்பட்டுள்ள கூண்டில் சிறுத்தை கண்டிப்பாக பிடிபடும் என வனத்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்…