தலைவாசல் அருகே 2 குழந்தைகளை கொன்ற வழக்கில் விவசாயிக்கு ஆயுள் தண்டனை
விதித்து சேலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே
உள்ள புளியங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி அமுதா.
இவர்களுக்கு சந்தோஷ் (11) என்ற மகனும், காவியா (6) என்ற மகளும் இருந்தனர்.
இதில் சந்தோஷ் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பும், காவியா தனியார்
பள்ளியில் 1-ம் வகுப்பும் படித்து வந்தனர். இதனிடையே மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட
சந்தேகத்தால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு தனது மகன் மற்றும் மகளை மாட்டுக்கு புல் அறுக்க வேண்டும்
என்று கூறி தோட்டத்துக்கு அழைத்து சென்ற சரவணன் திடீரென சந்தோஷ், காவியா
ஆகியோரை கிணற்றில் வீசி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக
வீரகனூர் போலீசார் வழக்குப்பதிந்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. விசாரணை
அனைத்தும் முடிவடைந்ததையடுத்து 2 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற
சரவணனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி
ஜெயந்தி தீர்ப்பு வழங்கினார்.
Like this:
Like Loading...