மாருதி சுசுகி நிறுவனம் தங்களது வாகனங்களின் விலையை 4.3 விழுக்காடு அளவிற்கு உயர்த்தியுள்ளது.
உருக்கு, அலுமினியம் உள்ளிட்ட உள்ளீட்டுப் பொருட்கள் விலை அதிகரித்து வருவதாலும், தொழிலாளர் கூலி உயர்வு அதிகரிப்பதாலும் ஜனவரி முதல் விலையை உயர்த்தப் போவதாக மாருதி சுசுகி நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று முதல் நான்கு புள்ளி மூன்று விழுக்காடு அளவிற்கு உயர்த்தப்படுவதாக அறிவித்துள்ளது. இது இன்று முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது.