தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சொர்க்கம் வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத் தீயால் அரியவகை மரங்கள் எரிந்து சேதமடைந்து வருகின்றன.
பெரியகுளம் லட்சுமிபுரம் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் சொர்க்கம் வனப்பகுதியில் மாலை முதல் காட்டுத்தி பற்றி எரியத் துவங்கியது. மேலும் இந்த காட்டுத் தீயானது பெரிய அளவில் பற்றி 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பற்றி எரிந்து வருகிறது.
மேலும் இந்தக்காட்டுத்தீயால் அந்த பகுதிகளில் உள்ள அரியமரங்களும், அரியவகை மூலிகை செடிகளும் தீயினால் எரிந்து கருகி நாசமாகி வருகின்றன. மேலும் கோடை காலம் துவங்கிய நிலையில் இருந்து தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து விட்டுவிட்டு காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது.
இந்த காட்டுத் தீயால் பெரும்பாலான மரங்கள் எரிந்து நாசம் ஆவதடு இயற்கை வளங்கள் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. எனவே வனத்துறையினர் தீத்தடுப்பு கூடுகள் அமைத்து காட்டுத்தீ ஏற்படாமலிருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.