சமூக வலைத்தளத்தில் பட்டியலிடப்பட்ட இனத்தை அவதூறாக பேசிய வழக்கில் நடிகையும் மாடலுமான மீரா மிதுன் கடந்த 14 ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஏற்கனவே எழும்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஊழியரை கொலை மிரட்டல் மற்றும் ஆபாச வார்த்தைகள் பேசியதாக அவர் மீது வழக்குகள் இருந்தது.
இந்த வழக்குகள் தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுனுக்கு எதிராக எழும்பூர் போலீசார் நேற்று 30 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் நட்சத்திர ஓட்டல் மேலாளரை மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட நடிகை மீரா மிதுன் இன்று எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பின்னர் அவர் மாஜிஸ்திரேட் பாலசுப்பிரமணியன் முன்பு கூச்சலிட்டார். அவள் மீது போலீசார் தன் மீது வழக்கு தொடுத்து தற்கொலைக்கு தூண்டுவதாக கூறினார். எழும்பூர் போலீஸ், இது வழக்குகள் குறித்து அவருக்கு சரியாகத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சார்பில் வழக்கறிஞர் வாதாட வரவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார். பின்னர் விசாரணை சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர், இந்த வழக்கில், நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கினார். 4 வழக்குகளில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு ஏற்கெனவே 1 வழக்கில் ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 2 வழக்கில் ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்.