மெக்ஸிகோ: படப்பிடிப்பில் துப்பாக்கி சூடு.. நடிகர் சுட்டதில் ஒளிப்பதிவாளர் பலி

ஹாலிவுட்டில் ஜோயல் சோசா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ரஸ்ட். இப்படப்பிடிப்பு மெக்சிகோவில் நடைபெற்று வருகிறது. நடிகர் அலெக் பால்ட்வின் நடித்த அதிரடி காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படபிடுப்புக்காக பயன்படுத்தும் துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுட்டதில் ஒரு பெண் ஒளிப்பதிவாளர் ஹலினா ஹட்சின்ஸ் உயிரிழந்தார். இயக்குனர் ஜோயல் சோசாவும் படுகாயமடைந்தார்.

ஹலினா ஹட்சின்ஸ்
ஹலினா ஹட்சின்ஸ்

பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எதிர்பாராமல் ஏற்பட்ட சம்பவத்தால் ரஸ்ட் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Translate »
error: Content is protected !!