தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இன்னும் ஓரிரு நாட்கள் தண்ணீர் தேங்கினால் பயிர் அழுக ஆரம்பிக்கும். இதனால் விவசாயிகள் வேதனைஅடைந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்டா மாவட்டங்களில் 1.5 லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில், மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்க அமைசர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவுக்கு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகிக்கிறார். இந்தக் குழுவில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், எஸ். ரகுபதி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவா.வி. மெய்யநாதன் இடம் பெற்றுள்ளார்.