சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக, நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி இன்று சென்னை கவர்னர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தலைமைச் செயலாளர் இறையன்பு, சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.