தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் நேற்று முன்தினம் இரவு ஹேக் செய்துள்ளனர். அதில் சீரற்ற செய்திகள் சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்திகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்தக் கணக்கின் அதிகாரப்பூர்வ காட்சிப் படமும் சுயத் தகவல்களும் காணப்பட்டன.
இதையடுத்து நேற்று இந்த கணக்கை சரி செய்யும் பணியில் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுபட்டனர். சில நிமிடங்களில் கணக்கு மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தது. இந்த ஹேக் நடவடிக்கை குறித்து தேசிய பேரிடர் மீட்புப் படை டெல்லி போலீஸ் சைபர் பிரிவில் புகார் அளித்துள்ளது. இது குறித்து விசாரணை நடக்கிறது.